சேலம்

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்

மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்து காணப்பட்டது.

இதனால் நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.90 அடியாக உயர்ந்ததது.

இந்த நிலையில் பகல் 12.25 மணி அளவில் மேட்டூர் அணை 100 அடியை இந்தாண்டு இரண்டாவது முறையாக எட்டியது. இதை அறிந்த காவேரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து தற்போது டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.