சிறப்பு செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் எடப்பாடியாருக்கு துணை முதல்வர் நேரில் ஆறுதல்

சென்னை

முதலமைச்சரின் தாயார் மறைந்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் கூறினார்.

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு செய்தி கேட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்ததோடு நேற்று காலை இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் அவர் தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும். தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேலத்திற்கு சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள், கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.