திருவண்ணாமலை

போளூர் வார்டு கழகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வார்டு கழகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவியை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் பேரூராட்சி பகுதியிலுள்ள 18 வார்டுகளில் உள்ள இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி புதிய உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக போளூர் நகர செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார். போளூர் ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் போளூர் பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள நிர்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் தனது சொந்த செலவில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் ஆர்வத்துடன் இளைஞர்கள் இணைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது இளைஞர்களுக்கு பல்வேறு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தலைமை வழங்கியுள்ளது. எனவே வருகின்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வென்றெடுத்து கழக ஒருங்கிணைப்பாளர்களின் கரங்களில் ஒப்படைப்போம் என சபதம் ஏற்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் தொப்புளான், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு, போளூர் முன்னாள் சேர்மன் செல்வம், ஒன்றிய அவைத்தலைவர் குருவிமலை கண்ணன், நகர பொருளாளர் சங்கர், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மதன் சேட்டு, நகர்ப்புற வங்கி தலைவர் எஸ்.டி.டி.ஏழுமலை உள்ளிட்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.