தமிழகம்

தலைமை செயலாளருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு

சென்னை

தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற க.சண்முகத்தின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. கொரோனா காலத்தில் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீட்டிக்க தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு அக்டோபர் மாதம் வரையில் தலைமைச் செயலாளர் க. சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் அக்டோபர் மாதத்துடன் க.சண்முகத்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் மேலும் 3 மாதங்கள் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இதனால் தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.