திருவண்ணாமலை

கழகம் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற செய்வோம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உறுதி

திருவண்ணாமலை

கழகம் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற செய்வோம் என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு ஆலோசனை கூட்டம் வெங்கடம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற செய்ய வேண்டும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்டம் கழகத்தின் கோட்டையாகும். அதை தொடர்ந்து நிருபிக்கும் வகையில் வரும் தேர்தலில் கழகப்பணியினை சிறப்பாக செய்து கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும்.

அதற்கு தகவல் தொழில் நுட்பபிரிவு மற்றும் பாசறையில் உள்ளவர்கள் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும். வரும் தேர்தல் தகவல் தொழில் நுட்பபிரிவை நம்பித்தான் சந்திக்கவுள்ளோம் ஆகையால் சிறப்பாக பணியாற்றுங்கள்.

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, வழக்கறிஞர் செம்பியன், மாவட்ட அம்மாபேரவை துணை செயலாளர்கள் ஜி.துரை, ஜி.சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.