சிறப்பு செய்திகள்

பெண்களுக்கு கடனுதவிகள், அம்மா இருசக்கர வாகனம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை

கோவை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெண்களுக்கு கடனுதவிகள் மற்றும் அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று பேரூர் பேரூராட்சி 13வது வார்டு ஆற்று ரோடு பகுதியில் பழுதடைந்த தார்சாலை சீரமைக்கும் பணி, கோவை-சிறுவாணி சாலை முதல் நரசீபுரம் சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி, சாலைமேம்பாடு செய்யும் பணி, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி, செம்மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும் பணி, செம்மேடு பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பல்நோக்கு மைய கட்டடம் கட்டும் பணி, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

முட்டத்துவயல் பகுதியில் பேவர் பிளாக் அமைக்கும் பணி மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வு பள்ளி சிறுபாலம் அருகில் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணி, முட்டத்துவயல் பகுதியில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி, கோட்டைக்காடு பகுதியில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி, காரமரத்தூர் பகுதியில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி,

நரசீபுரம் ஊராட்சியில் ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி, நியாய விலைக்கடையை புதுப்பிக்கும் பணி, கோவை-தொண்டாமுத்தூர் நரசீபுரம் சாலை முதல் விராலியூர் சாலையில் சாலை மேம்பாடு செய்யும் பணி, வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சி, விராலியூரில் ஜல்லிபாளையம் முதல் வைதேகி ரோடு வரை சாலை புதுப்பிக்கும் பணி என மொத்தம் ரூ.3.38 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிளை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

ேமலும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி செம்மேடு பகுதியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டடம், ரூ.17.64 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், வெள்ளிமலைப் பட்டிணம் ஊராட்சி விராலியூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டடம், ஆகியவற்றையும் அமைச்சர் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இக்கரைபோளுவாம்பாட்டி ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் மூலம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் ரூ.6.25 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கும், 14 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் பொருளாதார கடனுதவியும், 5 நலிவுற்று பெண்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.50,000-உதவித்தொகையும், சமூக நலத்துறையின் மூலம் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் வைப்பு தொகைக்கான காசோலையினையும், வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார்,
மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், கருடா சுரேஷ்,

ஒன்றிய கழகச் செயலாளர்கள் டிபி. வேலுச்சாமி, ராஜ் (எ) ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டிசி.பிரதீப், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.மோகன்ராஜ், கார்த்திகா பிரகாஷ் மற்றும் கே.ஜெயபால், பாசறை நிஷ்கலன், பேரூராட்சி செயலாளர்கள் ஜெகநாதன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.