தற்போதைய செய்திகள்

ரூ 19 கோடி மதிப்பீட்டில் நாகை கூழையாறு- சின்னமேட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

நாகை மாவட்டம் கூழையாறு, சின்னமேட்டில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ெஜயக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு,கூழையாறு கிராமங்கள் கடல் அரிப்பினால் மிகவும் பாதிப்படைந்துள்ளதால்,அங்கு கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,கொடியம்பாளையம் கிராமத்தில் மீனவ மக்களின் உபயோகத்திற்கு ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில்,முதலமைச்சர் 2020-21 ஆம் நிதியாண்டில் விதி எண் 110 ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம்,

சின்னமேடு கிராமத்தில் ரூ 9.78 கோடி செலவிலும்,கூழையாறு கிராமத்தில் ரூ 6.83 கோடி செலவிலும் கடல் அரிப்புத் தடுப்புப் பணி மேற்கொள்ளப்படும் எனவும் கொடியம்பாளையம் கிராமத்தில் ரூ 2.85 கோடி செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.தற்போது தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன.

இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் சின்னமேடு,கூழையாறு ஆகிய கடலோர கிராமங்கள் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். கொடியம்பாளையம் கிராமத்தில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் அக்கிராம மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.