பெரம்பலூர்

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் திறந்து கழக அரசு சாதனை – டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பெருமிதம்

பெரம்பலூர்

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து கழக அரசு சாதனை படைத்துள்ளது என்று இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.இளஞ்செழியன் வரவேற்று பேசினார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் பெரம்பலூர் எம்.செல்வகுமார், ஆலத்தூர் கிழக்கு என்.கே.கர்ணன், மேற்கு வழக்கறிஞர் சசிகுமார், வேப்பூர் தெற்கு கிருஷ்ணசாமி, வடக்கு எஸ்.செல்வமணி, வேப்பந்தட்டை மேற்கு டி.என்.சிவப்பிரகாசம், கிழக்கு ரவிச்சந்திரன், செந்துறை தெற்கு உதயம் எஸ்.ரமேஷ், வடக்கு சந்திரகாசன், பெரம்பலூர் நகர கழக செயலாளர் ஆர்.ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடச்சந்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசியாக பேசும்போது, எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் என கூறினார். அவர் பேசிய பேச்சில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது. அது போலவே கட்சியும் நல்ல எழுச்சியோடு உள்ளது.

டுவிட்டரில் கட்சியை நடத்தி வரும் கருணாநிதி மகன் ஸ்டாலின் 65 வயது வரை இளைஞரணி பொறுப்பு வகித்தார். அதன் பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அந்த பதவியை வகிக்கிறார். துண்டு சீட்டும் துரைமுருகனும் இல்லாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. துரைமுருகன் அடுத்த 2021-ல் நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? ஆனால் நம் கட்சியில்தான் கிளை செயலாளர் கூட முதல்வர் ஆகலாம் என தைரியமாக சொல்ல முடியும். சிலுவம்பாளையத்தில் தனது அப்பா காங்கிரஸ்காரர் என பாராமல் சிறு வயதிலேயே அ.இ.அ.தி.மு.க. கொடி கம்பம் ஏற்றியவர் இன்று கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார்.

தேனீர் வியாபாரி துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இதேபோல் தான் இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வர முடியும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், இலவச பள்ளி சீருடைகள் உள்ளிட்ட ஏனைய திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். அதனால் பல்வேறு நலதிட்டங்களை வாரி வழங்குவதால் அம்மாவின் ஆட்சியில் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக அளவில் கழகத்தில் இணைகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் நீட் தேர்வை எதிர்த்து சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம். ஒரு ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியையும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும், இரு மொழி கொள்கை உறுதியுடன் இருப்பதும் நம் கழக அரசு. தி.மு.க. தான் அடிமை அரசு. ஏனென்றால் காங்கிரசில் அங்கம் வகித்த தி.மு.க., கருணாநிதி இலங்கையில் 1.50 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன் மகள் கனிமொழி கைது ஆகாமல் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 63 சீட் கொடுத்து படுதோல்வியை சந்தித்தது தன் அடிமைத்தனத்தை ஒத்துக் கொண்டார்.

இவ்வாறு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எ.கே.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க பாலமுருகன், மாவட்ட கழக இணை செயலாளர் ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் வினோத், மாவட்ட பாசறை துணை தலைவர் அசோகன், பெரம்பலூர் ஒன்றிய பாசறை செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பாசறை இணை செயலாளர் புவனேஸ்வரி செந்தில் நன்றி கூறினார்.