தற்போதைய செய்திகள்

ரேசன் கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான பொருட்கள் கையிருப்பு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

பருவமழை காலத்தில் விநியோகம் செய்ய ரேசன் கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.ஓ.எஸ் மிஷின் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு பழைய ஸ்கேனிங் முறையும் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் முறை செயல்படுத்துவதில் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் இணையவழி பிரச்சினைகள் இருப்பதை கருத்தில் கொண்டும் பழைய ஸ்கேனிங் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் நியாய விலை கடைகளில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவிற்கு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்காத வண்ணம் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த நடப்பு பருவத்தில் தமிழகம் முழுவதும் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதிக்கீடு என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.