தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் சூழ்ச்சிகளை உடைக்கும் ஈட்டியாக இளைஞர்-இளைம்பெண்கள் பாசறை செயல்படும் – மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் உறுதி

அம்பத்தூர்

தி.மு.க.வின் சூழ்ச்சிகளை உடைத்திடும் ஈட்டியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்படும் என்று மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் உறுதியளித்தார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருவேற்காடு கெஜலட்சுமி திருமண மண்டபத்தில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

திருவேற்காடு நகர செயலாளர் சத்தியநாராயணன், அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், திருநின்றவூர் நகர செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவடி நகர பாசறை செயலாளர் நரேந்திரன், அம்பத்தூர் நகர பாசறை செயலாளர் பாண்டியன், திருவேற்காடு நகர பாசறை செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியல் இன்றி கண்ணியம் காக்கப்பட்டு வருகிறது அதற்கு தனது 21 வயதில் கிளைக் கழக செயலாளராக பணியை ஆரம்பித்து இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள நமது முதலமைச்சர் தான் சான்று. கழகத்தில் மட்டும் தான் சமதர்மம் பேணிக் காக்கப்படுகிறது தொண்டர்கள் அனைவருக்கும் பதவிகளைத் தரும் இயக்கமாக செயல்படுகிறது.

நாங்கள் அனைவரும் அரசியல் களத்தில் முட்கள் நிறைந்த பாதையில் நடந்த வந்து இன்று பல்வேறு உயர்ந்த பதவியில் இருக்கிறோம். ஆனால் சிவப்புக் கம்பளம் விரித்து முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கழகத்தில் உறுப்பினராக சேர்த்து வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு இன்று வரை மாணவ,மாணவியருக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டும்தான். இதேபோன்று மின்சாரத்துறையை எடுத்துக் கொண்டால் திமுக ஆட்சியில் 15 மணி நேர மின்வெட்டு இருந்த காலம் மாறி இன்று தடையற்ற மின்சாரம் மின் உற்பத்தியில் அதிகளவில் காணப்பட்டு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது அதாவது திமுக ஆட்சியில் நோ கரண்ட் அதிமுக ஆட்சியில் பிளஸ் கரண்ட், எக்ஸஸ் கரண்ட் இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் பகுதியில் பொது மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

இப்படி மாணவ மாணவிகள் இளைஞர்கள் தமிழக மக்கள் என அனைத்து சமுதாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சரை பார்த்து ஸ்டாலின் சொல்கிறார் இறந்தவர் வீட்டுக்கு சென்று இரங்கல் பா பாடுகிறார்கள் என்று. பல்வேறு பொய்களை மு.க.ஸ்டாலின் இன்று மாணவ சமுதாயத்திடம் கூறி வருகிறார்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொரோனா குறித்து ஆய்வு செய்யும் தலைவராகவும் அதிலேயே கட்சி நடத்தும் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இன்று பதவி வெறி பிடித்த தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடும் ஒரே இயக்கம் கழகம் தான்.

மருத்துவ படிப்பில் 4500 சீட் இடஒதுக்கீடு, 7.5% ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது என்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது கழக அரசு தான். கடந்த 2007-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பல்வேறு சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற ஏதுவாக அமைந்தது அந்தவகையில் திமுகவின் அத்தனை பொய்களையும், சூழ்ச்சிகளையும், உடைத்திடும் ஈட்டியாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்படும்.

இவ்வாறு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோலடி மகேந்திரன், எம்.டி.மைக்கேல்ராஜ், முல்லை தயாளன், ஆவடி குமார், லட்சுமையா, டன்லப் வேலன், ஏடி சந்திரன், டி.எஸ்.ராஜா, திருமலை, ராஜா, சகுந்தலா சந்தோசம், ரீனா ஆறுமுகம், சிவா, டேனியல், மாரியப்பன், ஜெயகுமார் விஜயலட்சுமி முருகேசன், கே.பி.முகுந்தன், ராஜாசிவபாலன், எல்.ஜி.பிரகாஷ், சிமியோன்பிரபு, கழக வழக்கறிஞர்கள் அறிவரசன், முருகேசன், எல்.என்.சரவணன், திருநின்றவூர் தினேஷ்குமார், முகவை சுந்தரம், ஆவடி கண்ணன், ஆர்.வி.கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன், ஆனந்தராஜ், ஆர்.சி.டி.கமல், ஆர்.சி.டி.ஹேமந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்.