தற்போதைய செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் 221-வது நினைவு நாள் : திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை –

தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்து போராடியதன் காரணமாக வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட ‌குறுநில மன்னர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது இதில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான முள்ளகாடு செல்வகுமார், வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கயத்தார் கண்ணன், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சிதம்பராபுரம் நீலகண்டன், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மாரியப்பன், வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் சோலைராஜ், வடக்கு மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் மாரியப்பன், வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துறையூர் கணேசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சௌந்தரராஜன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சாம் கவுதம், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி தலைவர் விஜயகுமார், டாக்டர் குருராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.