தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணி சிறப்பு பிரதமரிடம் பாராட்டு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதம்

கண்டமங்கலம்

கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரிடம் பாராட்டு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதத்துடன் கூறினார்.

கண்டமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் பகுதியில் பாசறை ஆலோசனை கூட்டத்தில் பாசறை நிர்வாகிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான புத்தகத்தை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவினர் ஒரு குடும்ப கட்சி. வாரிசு இயக்கமாகும். திமுகவினர் கவர்ச்சியான திட்டங்களை கூறி மக்களை திசை திருப்புவார்கள். தி.மு.க.வுக்கு கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு முக்கிய நோக்கமாகும். திமுக ஒரு ஏஜெண்ட் அரசியல் கட்சி. ஆனால் அம்மாவின் அரசோ மக்களுக்கான அரசு. உழைப்பவர்களுக்கு பதவி தரும் ஒரே இயக்கம் அதிமுக தான்.

இங்கு வருகை தந்துள்ள பாசறை நிர்வாகிகள் கழக ஆட்சியானது 3-வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அரும்பாடு பட வேண்டும்.பாசறை நிர்வாகிகள் தான் அடுத்த தலைமுறைக்கு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். உங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம். கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்து ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்துள்ளனர்.

பாரத பிரதமர் மோடி இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தான் சிறப்பாக செயல்படுகிறது என்று அனைத்து முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் கூறி பாராட்டியுள்ளார். மேலும் மாணவ, மாணவிகள் கல்வியில் வளர்ச்சி அடைய 73 கலைக் கல்லூரிகளும், 5 சட்டக் கல்லூரிகள், விழுப்புர மாவட்டத்திற்கு ஒரு பல்கலை கழகத்தை வழங்கியுள்ளார்கள். அம்மா அவர்கள் கூறியதைப் போல் இளைஞர் பாசறை நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி கழக ஆட்சியை 3 வது முறையாக அமைக்க அரும்பாடு பட வேண்டும்.

இவவாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.