சிறப்பு செய்திகள்

உறுதி, வீரத்திற்கு இலக்கணம் வீரபாண்டிய கட்டபொம்மன் – முதலமைச்சர் புகழாரம்

சென்னை

உறுதி, வீரத்திற்கு இலக்கணம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்குமேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.