தமிழகம்

வெற்றிவேல் மறைவுக்கு துணை முதல்வர் இரங்கல்

சென்னை

பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மறைவுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.