கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் – துணை முதலமைச்சர் டுவிட்

சென்னை
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.