சிறப்பு செய்திகள்

சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் கழக கொடி ஏற்றினார்

சேலம்

கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக கொடியை ஏற்றி வைத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், ஒன்றியக் குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் சார்பு அமைப்புகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.