மற்றவை

சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்

சென்னை

சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்.

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடக்கிவைத்தார்.

12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 5 ஆண்டு கால ஒருங்கிணந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடைபெற்றது. சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு 5,283 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 4,910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 373 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 4,910 பேருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியிடப்பட்டது.