தற்போதைய செய்திகள்

கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் – அமைச்சர் கே.பி.அன்பழகன் முழக்கம்

தருமபுரி, அக்.20-

கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர் ஒன்றியங்களுக்குட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சி சின்னதும்கல், பெரிய தும்கல், கோடிஹள்ளி ஊராட்சி ஜக்கம்பட்டி, கஞ்சல்நத்தம் ஊராட்சி எம்.தண்டா ஆகிய பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

முன்னதாக அனைத்து பகுதிகளிலும் கழக கொடியை ஏற்றி வைத்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: –

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.தனிநபர் தேவைகளை கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக கழக அரசு விளங்குகிறது. சாதாரண தொண்டர்கள்கூட முதலமைச்சர் ஆகும் இயக்கம் கழகம் தான். இங்கு இருக்கின்ற நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் இந்த பகுதியில் வாழும் மக்களை அரசு புறக்கணிக்க கூடாது என்பது தான் அம்மாவின் எண்ணம். குறிப்பாக ஏமனூரில் ரூ.7 கோடியில் சாலை அமைத்து கொடுத்து உள்ளோம். குறைவான மக்கள் வாழ்ந்தாலும் அப்பகுதியை புறக்கணிக்காமல் வனத்துறை அனுமதி பெற்று சாலை வசதி இல்லை என்பதால் சாலை அமைக்கப்பட்டது.

ஏரியூர், கடத்தூர் ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டது. ரூ.4.50 கோடி ஒதுக்கி ஏரியூர் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பென்னாகரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.4.50 கோடியை ஒதுக்கி தந்தவர் முதலமைச்சர் எடப்பாடியார். கடந்த மாதம் பென்னாகரம் ஒன்றியத்தில் 1323 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பட்டது. அன்றே 437 பேரிடம் மனுக்களை பெற்று அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. இன்றைக்கு 17 லட்சம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்கியது அம்மாவின் அரசு. இன்று மூன்றாவது முறையாக கழகம் ஆட்சிக்கு வர மக்கள் வீறுகொண்டு எழுந்திருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் யார் போட்டியிடுகின்றார்களோ அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.