சிறப்பு செய்திகள்

ரூ. 10 கோடி வெள்ள நிவாரண நிதி – தமிழக முதலமைச்சருக்கு தெலுங்கானா ஆளுநர் நன்றி

சென்னை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்டை மாநில மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் மனதுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாகவும் மற்றும் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தமிழகத்தின் மகளாகவும், தெலுங்கானாவின் சகோதரியாகவும் மற்றும் ஆளுநராகவும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.