சிறப்பு செய்திகள்

முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால், ஸ்டாலின் ஆறுதல்

சென்னை

முதலமைச்சர் தவுசாயம்மாள் காலமானதை யொட்டி சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினர். முதலமைச்சரின் தாயார் படத்துக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானதை யொட்டி, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு, நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் வந்து முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நேற்று காலை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி ஆகியோர் வந்து முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் மற்றும் குடும்பத்தினர், நீதியரசர் செல்வி வேலுமணி, ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, பி.சத்யா, விருகை வி.என்.ரவி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம்கபூர், வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா,

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் வி. தங்கவேலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.மைத்ரேயன், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராம ராஜா, வேல்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ் ஆகியோரும்,

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தர், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகை குட்டி பத்மினி, நடிகை சித்ரா, நடிகர் அப்சல், நடிகர் உதயா, நடிகை சங்கீதா, நடிகர் ரமேஷ் கண்ணா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பொருளாளர் சுவாமிநாதன், திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், இசையமைப்பாளர் தீனா ஆகியோர் நேரில் சென்று, தவுசாயம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார்கள்.