தற்போதைய செய்திகள்

தீர்வே காண இயலாத தலைவர் ஸ்டாலின் – டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கடும் தாக்கு

கள்ளக்குறிச்சி

தீர்வே காண இயலாத தலைவர் ஸ்டாலின் என்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய கழகம் சார்பில் பாதூரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளருமான ரா.குமரகுரு தலைமை தாங்கினார். திருநாவலூர் ஒன்றிய செயலாளர் சந்திரன் வரவேற்றார். இந்த பாசறை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பங்கேற்று பேசியதாவது:-

சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியது போல கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்து ஏழை, எளிய மக்களுக்கு நல்லாட்சி வழங்க இளைஞர்களாகிய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கழகத்தில் மட்டும் தான் உழைப்பவருக்கு உயர்வு நிச்சயம். மக்களுக்கு தேவையானவற்றை பாசறை நிர்வாகிகள் செய்து கொடுத்தால் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். அப்பொழுது உங்கள் மீதும் கழகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கையை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர்கள் டுவிட்டர் அரசியல் செய்கிறார்கள். மக்களின் பிரச்சினைக்காக தீர்வு காணும் அரசு அதிமுக தான். திமுக தலைவர் ஸ்டாலின் தீர்வே காண இயலாத தலைவர். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்துள்ளார்கள்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தலைவாசலில் மாபெரும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவும், இளைஞர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு கலைக்கல்லூரிகளை வழங்கியுள்ளார்கள். முதலீடுகளை ஈர்த்து 14 நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளால் 67 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சிறப்பாக ஆட்சி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த பாசறை நிர்வாகிகள் அரும்பாடு பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பாசறை செயலாளர் ராகேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தயாநிதி, ஒன்றிய பாசறை செயலாளர் புகழ்மணி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தணிகாசலம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சம்பத், முன்னாள் ஊராட்சி செயலாளர் பாஸ்கர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.