தற்போதைய செய்திகள் மற்றவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்

பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

சென்னை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்தாலும் கூட, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் விவசாயிகளுடைய நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்தில், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், குறிப்பாக என்னுடைய போளூர் சட்டமன்ற தொகுதியில், அத்திமூர், பெலாசூர், மண்டகளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைத்து தருமா?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.