திருவண்ணாமலை

கழகத்தின் வெற்றிக்கு புதிய வியூகம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு

திருவண்ணாமலை

கழகத்தின் வெற்றிக்கு புதிய வியூகம் வகுத்து செயல்படுவோம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், களம்பூர் பேருராட்சிபகுதியிலுள்ள இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள கழக நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கும் கூட்டம் நடைபெற்றது. களம்பூர் நகர செயலாளர் கே.பி.பஞ்சாசரம் வரவேற்றார். போளூர் ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து களம்பூர் பேரூராட்சி பகுதியைச் சார்ந்த செல்வம், ராஜி, தலைமையில் 200-க்கு மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் இணைந்தனார். கூட்டத்தில் களம்பூர் பேருராட்சி 18-வது வார்டுகளில் வட்ட கழக செயலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் ரூ.90, ஆயிரம் நிதி உதவியினை தனது சொந்த செலவில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக ஆட்சியை பிடிக்க புதிய வியூகங்களை வகுத்து தந்துள்ளனர். அதன்படி நாம் செயல்படுவோம்.

படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கி தந்து கொண்டிருப்பது அம்மாவின் அரசுதான்
இப்பகுதியில் இருந்து படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கழகத்தில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ள ஒரே கட்சி அதிமுக தான் 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையின் பூத் கமிட்டி உறுப்பினர்களை வைத்து கழகத் தலைமை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது.

இந்த பூத் கமிட்டியில் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்கள் வருகின்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்.2021-ல் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மூன்றாவது முறையாக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் அரசு தமிழகத்தில் அமைய கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.