சிறப்பு செய்திகள் தமிழகம்

தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆறுதல்

சென்னை

தாயார் தவுசாயம்மாள் காலமானதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி முதலமைச்சரை நேற்று முன்தினம் பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று இரண்டாவது நாளாக பல்வேறு கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி., மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் சி. விஜயராஜ்குமார், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, ஆகியோர் நேற்று சென்று தவுசாயம்மாள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலத்தி முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினர்.

இதேபோல் தினமலர் நாளிதழின் ஆசிரியர் கி. ராமசுப்பு மற்றும் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் தலைவர் மனோஜ் குமார் சந்தோலியா, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர்
சி.வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், Fortis வடபழனி மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ். சீனிவாசன், அனைத்து ஜெயின் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள், வன்னியர் ஷத்ரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள்,

தமிழக தலைமை அகமுடையார் சங்க நிர்வாகிகள், சென்னை மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை நிர்வாகிகள், திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்பட நடிகர்கள் பிரபு, எஸ்.வி. சேகர், ஜீவா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, திரைப்பட இயக்குநர் ஆர்.பி. சவுத்ரி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கவுரவத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினர்.