தற்போதைய செய்திகள்

திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை

சிவகாசி

திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை ெசய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கிவைத்து வருகின்றார். இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சியில் நேற்று ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதன்படி திருத்தங்கல் நகராட்சியில் 21-வது வார்டு திருப்பதி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 18-வார்டு சுக்கிர வார்பட்டி சாலையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2-வது வார்டில் பள்ளிக்கூட தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2-வது வார்டு சிறுவர் பூங்கா தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 20-வது வார்டில் அக்ரகார தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 18-வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 18-வது வார்டில் நெற்குத்திப் பாறை அருகே ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி,

20-வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுதல், 3-வது வார்டு பெரியார் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், 5-வது வார்டு முருகன் காலனியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், 9 மற்றும் 10 வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுதல்,

9-வார்டு கண்ணகி காலனியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், 18-வது வார்டு பழைய வெள்ளையாபுரம் சாலையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.