தமிழகம்

செயற்கைக்கோளை கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சை மாணவனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை

எடை குறைந்த செயற்கைக்கோளை கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சை மாணவனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்து உலக அரங்கில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இவ்வாறு துணைமுதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.