திருவண்ணாமலை

17 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதிஉதவி – மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் 17 கிளைகளில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கழக கொடியேற்றி கிளை கழகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றிய பகுதியில் உள்ள தென்னம்பட்டு, குத்தனூர், அழிவிடைதாங்கி ஆகிய கிராமங்களில் உள்ள 17 கிளை கழகங்களில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பங்கேற்று கழக கொடியை ஏற்றினார். மேலும் 17 கிளை கழக நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 வீதம் 85 ஆயிரம் ரூபாயை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சில்வர் தட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜூ, ஒன்றிய செயலாளர் பி.கே.நாகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.