திருவண்ணாமலை

காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் ஆனைவாடி பகுதியில் தொடங்கப்பட்டது. இதற்கான முழுசெலவுத் தொகையையும் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் இலவச பயிற்சி மையத்தை நேற்றுதொடங்கி வைத்தார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசுகையில், கலசப்பாக்கம் தொகுதியில் ஏற்கனவே எனது சொந்த செலவில் ஏழ்மையான, பின்தங்கிய படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம், அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவலர் பணியில் இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சியை ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெயசீலன் வழங்க உள்ளார். இந்த பயிற்சியை சிறந்த முறையில் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்றார்.

முன்னதாக காவலர் போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையத்திற்கு 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது, பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சால்வை அணிவித்து வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜெ.சம்பத், சமூக சேவகர் என்.அரிகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் முன்னாள் ராணுவ வீரர் ஆர்.நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.வி.நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, வழக்கறிஞர் அணி இணை செயலாளர் செம்பியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.துரை, முக்கிய பிரமுகர்கள் பஞ்சர்வர்ண லட்சுமணன், எஸ்.பாபு, ஆர்.பாரத்ராஜ், சி.பிரகாஷ். பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணா, பி.ராமச்சந்திரன், பி.பூபதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அஸ்லாம் பாஷா, கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.