தற்போதைய செய்திகள்

இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் 600 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் 8-வது வார்டு முதல் 14-வது வார்டு வரை உள்ள பகுதியில் 600பேர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் ஏற்கனவே 1 முதல் 7-வது வார்டு வரை உள்ள பகுதியில் 500 பேர் அமைச்சர் முன்னிலையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். புதன்கிழமை ஆரணி டவுனில் உள்ள 8 முதல் 14 வரையிலான வார்டுகளில் உள்ள 7 வார்டுகளை சேர்ந்த 600 பேர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சி அருணகிரிசத்திரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் பாசறையில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்துள்ள நீங்கள் உங்கள் பகுதியில் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். குறிப்பாக ஆரணி தொகுதியில் கழக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளதை எடுத்து கூற வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்றனர். அதன்பின்னர் இதுவரை ஆரணி மக்களுக்கு நன்றி கூட கூற அவர்கள் வரவில்லை. வெற்றி பெற்றவர் ஆரணிக்காக என்ன செய்தார். மேலும் திமுகவினர் கழக அரசு செய்யும் நல்ல திட்டங்களை தவறாக மக்களை சென்றடைய செய்கின்றனர். அதை முறியடிக்கும் வகையில் பாசறையில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நகர செயலாளர் எ.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் அரையாளம் எம்.வேலு, பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெ.சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.எஸ்.அன்பழகன், கழக நிர்வாகிகள் எ.கே.பிரபு, எஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, சிவக்குமார், பாரதி, காந்திநகர் வினாயகம், புங்கம்பாடி சுரேஷ், மூர்த்தி, ஐசக், முருகன், பாலு, ஏகாம்பரம், முனியன், ஜி.வெங்கடேசன், ஜி.பாஸ்கர், சைதை சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.