தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்

சென்னை

அரசின் சாதனைகளை விளக்கி ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொண்ட மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜஷ் கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக பெருமிதத்துடன் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு சென்னை கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் கழக அரசின் சாதனகளை விளக்கி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க., அ.ம.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பொதுமக்களுக்கு எந்த பிரஜோனமும் இல்லை.
ஆளுகின்ற அரசால் மட்டுமே அரசின் திட்டங்களை முழுமையாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாலிக்கு தங்கம், பட்டதாரிகளுக்கு நிதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளுக்கு 14 வகையான இலவச மருத்துவ பெட்டகம், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள்,

இலவச வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, கழிவுநீர் வசதி, நகர்ப்புறங்களை போல் கிராமபுறங்களை மேம்படுத்துதல், முதியோர் உதவித்தொகை, அம்மா உணவக விடுதி, சிறு வியாபாரிகளுக்கு வட்டியில்லா வங்கி கடன் உள்ளிட்டவகளை அம்மாவின் நல்லாசியுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நிறைவேற்றி வருகின்றனர்

கொரோனா காலத்தில் நோய் தடுப்பு பணிகளில் மாவட்டம் தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதேபோன்று முதல்வர், துணை முதல்வர் உத்தரவை ஏற்று ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் சுமார் 50,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், ஏ.கணேசன், வேல்முருகன், முத்து செல்வம், ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், எம்.வேலு, டி.ஜே.சுரேஷ், ஏ.சேகர் மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.