தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கள்ளக்குறிச்சி

மாணவர்களுக்கு விரைவில் 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. மெட்ரிக் பள்ளிகளின் இயக்கக இயக்குநர் கருப்பசாமி வரவேற்றார்.

உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கிருஷ்ணபிரியா, தமிழ்நாடு இணையம் சர்க்கரை ஆலை இணையம் தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு தமிழ்நாட்டில் 34.151 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அடித்தட்டில் உள்ள மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற இந்தியாவில் 24 சதவீதம் மட்டும் தான். ஆனால் தமிழகத்தில் 49.6 சதவீதத்தை பெற்று வரலாறு படைக்கிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.

இதனால் அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன் வருகிறார்கள். இங்கு வந்துள்ள நான்கு மாவட்டத்தில் 505 பள்ளிகள் ஓராண்டு, ஈராண்டு நீட்டிப்பு ஆணையை கேட்டீர்கள். ஆனால் அம்மாவின் அரசு மூன்றாண்டு ஆணையை வழங்கியுள்ளது. அம்மாவின் அரசு ICF கல்வி முறையை புகுத்தி கல்வியை மேம்படைய செய்துள்ளது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் கையில் உள்ள மடிகணினி அனைத்து பாடப்பிரிவுகளும் ICD முறையில் எளிய வகையில் பதிவு இறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது STRT முறையால் நீட் தேர்வில் 150 கேள்விகளில் 126 கேள்விகள் இடம் பெற்றுள்ளது.

நமது ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றியடைவது முதலமைச்சர் சீரிய முயற்சியாகும். அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றியவர் நமது முதல்வர் ஆவார். 303 மாணவர்கள் நீட் தேர்வாகி தமிழகம் வரலாறு படைத்துள்ளது.

தற்பொழுது கிராமபுற மாணவர்களுக்கு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள் ஆனால் கேட்காமலேயே கொடுக்கின்ற அரசு அம்மாவின் அரசு. இந்த அரசு மனிதநேயமிக்க அரசு ஆளுமை மிக்க அரசு. நமது அம்மாவின் அரசு 7600 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க வழிவகை செய்துள்ளது.

இப்பொழுது கரும்பலகையில் எழுதுகின்ற மாணவர்களுக்கு விரைவில் 80000 ஸ்மார்ட் போன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அட்டர்டிங்கர் லேப் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமபுற மாணவர்கள் விஞ்ஞான அறிவு பெறமுடியும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல்பாபு, மாவட்ட கழக நிர்வாகிகளான ஞானவேல், சீனிவாசன், செந்தில்குமார், நகர செயலாளர்கள் துரை, பாபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், அருணகிரி, அரசு, பழனி, ராஜேந்திரன், பழனிசாமி, கதிர்தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், ராமலிங்கம், ஏகாம்பரம் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.