தமிழகம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்

சென்னை

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை சந்தித்து அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் முதலமைச்சர் அங்கிருந்த அமைச்சரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடமும், மருத்துவர்களிடமும் அன்னாரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.