தற்போதைய செய்திகள்

கழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்

திருவண்ணாமலை

கழகம் மீண்டும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இளைஞர், இளம்ெபண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் அறைகூவல் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கழக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

கழகத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல், இடைத்தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெற்றது. நீங்கள் மாவட்ட அளவில். ஒன்றிய அளவில். கிளை கழக அளவில் ஒன்று சேர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்ட காரணத்தினால் வெற்றி பெற முடிந்தது. இதனை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் தற்பொழுது இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க உள்ளனர். நீங்கள் அனைவரும் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அம்மாவின் அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி அரியணையில் அமர வைக்க ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னும் கழகம் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சி புரியும் என்று சொன்னார். அதற்கு கட்டியம் கூறுகிற வகையில் கழக நிர்வாகிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஆரும்பாடுபட வேண்டும். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் தலைமை சொல்லும் வழிமுறைகளுக்கு ஏற்ப அதை நிறைவேற்றித் தர கடுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் பேசியதாவது:-

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. பொது பிரச்சினை ஏதாவது வந்தால் ஸ்டாலின் வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடுவார். அறிக்கையும், துரைமுருகனும் இல்லாவிட்டால் ஸ்டாலின் கிடையாது.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டுவந்து பெண் கல்வியை ஊக்குவித்தவர் அம்மா அவர்கள். அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதில் 3000 மாணவர்கள் மருத்துவம் பயில வழிவகுத்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடம் ஒதுக்கியது
கழக அரசு தான். எனவே கழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து நீடிக்க பாடுபட வேண்டும். கழக அரசால் தான் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும். மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.