திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக வங்கியின் தலைவர் தச்சை என்.கணேசராஜா கூறினார்.

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 104-வது பேரவை கூட்டம் வங்கித் தலைவர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் நடைபெற்றது. முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மண்டல இணை பதிவாளர் அழகிரி முன்னிலை வகித்தார். மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சரக துணை பதிவாளர்கள் முத்துசாமி, வீரபாண்டி. விஜயன், குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில் வங்கி தலைவர் தச்சை என்.கணேசராஜா பேசியதாவது:-

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1918-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு 32 கிளைகள் மூலம் சேவை புரிந்து வருகிறது. 2019-2020-ம் ஆண்டில் வங்கியானது ரூ,.11.45 கோடி லாபம் ஈட்டி வங்கியின் நிகர நஷ்டம் 10.85 கோடி நேர் செய்யப்பட்டு ரூ.44.13 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. 25 ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்ட இந்த வங்கி தற்போது கழக ஆட்சியில் லாபத்திற்கு வந்துள்ளது. நடப்பாண்டில் நேரடி கடன்கள் மற்றும் இணைப்பு சங்கங்கள் மூலமாக ரூபாய் 970.25 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் 2212 குழுக்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உடன் 2299 குழுக்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 511 குழுக்களுக்கு வங்கி மற்றும் சங்கங்கள் மூலமாக சென்ற நிதி ஆண்டில் குழு கடனாக ரூ.ரூ.8.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தற்போது வரை 9159 பயனாளிகளுக்கு ரூபாய் 103.54 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது .2016 முதல் 2019 வரை 52389 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ.7.4 கோடி வழங்கப்பட்டுள்ளது

இரு மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.78.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 1148 மகளிர் குழுக்களுக்கு ரூ.52.36 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய கூட்டுறவு வங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இவ்வாறு வங்கித் தலைவர் தச்சை என்.கணேசராஜா பேசினார்.