மதுரை

தி.மு.க.வினரால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தாக்கு

மதுரை

தி.மு.க.வினரால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி திருப்பரங்குன்றம் கிழக்குப்பகுதி கழகம் சார்பில் 95-வது வார்டில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளரும், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி கழக செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட கழக செயலாளர் பொன் முருகன், நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொ.ராசு வரவேற்புரையாற்றினார்.

இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணைச்செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக துணைச்செயலாளர் செல்வகுமார், கழக நிர்வாகிகள் கார்த்தி, பாலமுருகன், முத்துவேல், மோகன்தாஸ் பாண்டி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

பூத் கமிட்டி என்பது மிகவும் முக்கியமானதாகும். பூத் கமிட்டி பொறுப்பாளர்களான நீங்கள் தேர்தல் பணிகளை கவனமாக கையாள வேண்டும். இன்று முதல் தேர்தல் காலம் வரை முழு நேர வேலையாக தினந்தோறும் மக்களிடத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக அம்மாவின் அரசு எண்ணற்ற சாதனை திட்டங்களை மக்களுக்கு வழங்கி உள்ளது. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எதையாவது பொய் பிரச்சாரம் செய்து அதன்மூலம் மக்களை திசை திருப்ப அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களை எடுத்துக்கொண்டால் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரை முதலிடத்தில் திகழ்வது தமிழகம் ஆகும். ஆகவே பூத்கமிட்டி நிர்வாகிகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் சரித்திர சாதனை திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துச்சென்று வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை கழகத்திற்கு பெற்று தந்திட பாடுபட வேண்டும். உங்களுக்கான அங்கீகாரத்தை முதல்வரும், துணை முதல்வரும் வழங்குவார்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார்.