திருவண்ணாமலை

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி

திருவண்ணாமலை

அரசின் திட்டங்களால் கழகத்துக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் எடப்பாடியாரே மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதிபட கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கம் ஒன்றியம், தண்டராம்பட்டு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகவும், வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, தொழில்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 18 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்த முடியாத பல்வேறு மக்கள் நல திட்டங்களை அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தமிழகத்தில் செயல்படுத்தி மக்களிடம் நற்பெயரையும், ஆதரவையும் பெற்று உள்ள காரணத்தால் வரும் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் தமிழக முதல்வராக அவரை தேர்ந்தெடுப்பார்கள். அதற்காக கழக நிர்வாகிகள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இதனைதொடர்ந்து செங்கம் தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்.