தற்போதைய செய்திகள்

இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் 500 பேர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் 500 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியில் கழக அரசு ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிவாரணத்தொகை 12 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தாலிக்குதங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி தருவது கழக அரசு. தொடர்ந்து அம்மாவின் வழியில் விலையில்லா கணினியை கழக அரசு வழங்கி வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர வைத்தது கழக அரசு. பல தடுப்பணைகளை கட்டி விவசாயிகளின் நம்பிக்கையை பெற்ற முதல்வராக செயல்படுகிறார் எடப்பாடியார். ஆகையால் நாம் மீண்டும் எடப்பாடியரை முதல்வராக்குவோம்.

கழக அரசின் சாதனைகளை பாசறையில் சேர்ந்துள்ள நீங்கள் வீடு வீடாக எடுத்து செல்லுங்கள். திண்ணை பிரச்சாரம் செய்யுங்கள். கழகத்திற்கு புதுதெம்பு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இளைஞர் மற்றும் இளம்பெகள் பாசறைக்கு தொகுதி முழுவதும் ஏராளமான உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான பணிகளை செய்து கழகத்தை வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், பையூர் தலைவர் சரவணன், இரும்பேடு வேலு, இரும்பேடு கோவிந்தராஜ், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், வேலப்பாடி சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.