தற்போதைய செய்திகள்

ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் நகரத்தில் உள்ள 3.000 ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு சீருடைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் நகரத்தில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் தேரடி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் வ.கந்தன், பொருளாளர் எஸ்.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்துகொண்டு தனது சொந்த செலவில் கடலூரில் உள்ள 3000 கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை வழங்கி அவர்களை கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே.எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் ஆர்.மாதவன், மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலகிருஷ்ணன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, 22-வது வார்டு செயலாளர் ஏ.ஆர்.சி.நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.