தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அம்மா டிராபி 20/20 கிரிக்கெட் போட்டி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சவுராஷ்ட்ரா பள்ளி, கே.என்.எல் பள்ளி, சவுராஷ்ட்ரா கிளப், சவுராஷ்ட்ரா கல்லூரி, சவுராஷ்டிரா சபை, அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை, எம்.ஏ.வி.எம்.எம் பள்ளி, முத்துச்சாமி நாடார் பள்ளி, ஜெயின் பள்ளி ஆகிய 17 அணிகளை சேர்ந்த 300 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.5000, நான்காம் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், பகுதி கழக செயலாளர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, ஏ.கே.முத்து இருளாண்டி, முருகன், வட்ட கழக செயலாளர்கள் கார்மேகம், தனசேகர், சரவணன், அரியநாச்சி ராமலிங்கம், நூர் முகமது, மன்னாதி, பாண்டி, முக்கூரான், பாலகிருஷ்ணன், போஸ், எம்.ஜி.ஆர். நாகராஜ், மலைச்சாமி, மணிகண்டன், முருகன், ஜெயக்குமார், ஜீவா மற்றும் சொக்கர், முத்துச்செல்வம், கனி, ஆட்டோ போஸ், நல்லுசாமி, முருகன், சித்தரைலிங்கம், மார்க்கெட் செல்லத்துரை, கார்த்திகை சாமி, ராமமூர்த்தி, சரவணன், செல்வம், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.