தற்போதைய செய்திகள்

99 கிளை கழகங்களுக்கு ரூ.4.95 லட்சம் நிதியுதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 99 கிளை கழகங்களுக்கு 4.95 லட்சம் ரூபாய் நிதியுதவியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 76 கிளைகள், ஒன்றிய நிர்வாகிகள் என ஊராட்சிகளுக்குட்பட்ட 99 கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சியில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீண்டும் கழக ஆட்சி தொடர அனைவரும் சட்டமன்றதேர்தல் பணிகளை இப்போதே துவங்க வேண்டும். குறிப்பாக கழகத்தினர் தங்களது கிராமத்தில் உள்ள வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளை செய்யுங்கள்.

கழக அரசின் சாதனைகளான கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதி ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரம் வழங்குவது, தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி வழங்குவது, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுவது, விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் நிரம்பியது, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்குதல், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசு கேபிள் டிவி, ஆரணி மக்களுக்கு கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், 50 கோடி ரூபாயில் ஆரணி முழுவதும் தார்சாலைகள் அமைத்திருப்பது. ைகலாய நாதர் கோயில், எஸ்வி.நகரம் மாரியம்மன் கோயில், தேவிகாபுரம், கொளத்தூர், ஆரணிபாளையம் ஸ்ரீனிவாசபெருமாள் கோயில், காமக்கூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு புதிய தேர் வழங்கியது, ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலில் 2.5 கோடி ரூபாயில் திருமண மண்டபம், புத்திரகா மேட்டீஸ்வரர் கோயில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.