தமிழகம்

வேலூர்- தருமபுரி உள்பட 13 மாவட்டங்களில் ரூ.81.24 கோடியில் 21 பாலங்கள் சுரங்கப்பாதை – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவு எண் 4-க்கு மாற்றாக, 21 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 59 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவு எண்.4க்கு மாற்றாக, 21 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதையை காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.மேலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், இரும்புலிச்சேரி மற்றும் சேவூர் கிராமங்களின் இடையில், இரும்புலிச்சேரியில் 14 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்,

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சிறுகரும்பூர்-வேகாமங்கலம் சாலையில், சிறுகரும்பூரில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பெரும்பாடி-சேம்பள்ளி-ஜிட்டப்பள்ளி சாலையில், ஜிட்டப்பள்ளியில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பூவனூர்-காளாச்சேரி-முன்னவால் கோட்டை சாலையில், காளாச்சேரியில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், ராமநாதபுரம்-எமனேஸ்வரம் சாலையிலிருந்து பி.கொடிக்குளம் சாலை, பந்தப்பனேந்தலில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அனுமந்தீர்த்தம்-பொய்யப்பட்டி சாலையில், பன்னிமடுவில் 4 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரிமங்கலம் வட்டம், மல்லசமுத்திரம்-அனுமந்தபுரம் சாலையில், சாவடியூரில் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்,திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி-விஸ்வாம்பாள் சமுத்திரம்-மேட்டூர் சாலையில், கோட்டப்பாளையத்தில் தாழையாற்றின் குறுக்கே 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முசிறி வட்டம், வாளவந்தி-துளையாநத்தம் (வழி) மங்களம் சாலையில், மங்களத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பைத்தம்பாறை-சேருகுடி சாலையில், நாடார் காலனியில் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கல்லாத்தூர்-பாப்பாக்குடி-மேலணைக்குழி சாலையில், பாப்பாகுடியில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர்-பூலாங்குளம் சாலையில், வாசுதேவநல்லூரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், சிவசைலம்-தருமபுரம் மடம் சாலையில், சிவசைலத்தில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரம்பை-பொட்டல் சாலையில், பொட்டலில் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் நாங்குநேரி வட்டம், ரெட்டியார்பட்டி-விஜயநாராயணம் சாலையில், தாமரைச்செல்வியில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சின்னப்புலிக்குடிகாடு-ராகவாம்பாள்புரம் சாலையில், சின்னப்புலிக்குடிகாட்டில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சாலியமங்கலம்-சடையார்கோவில் சாலையில், சடையார்கோவிலில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், கணபதி-அத்திப்பாளையம் சாலையில், அத்திப்பாளையத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிணத்துக்கடவு வட்டம், காமநாயக்கன்பாளையம்-நெகமம்-செட்டிபாளையம் சாலையில், பனப்பட்டியில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி வட்டம், செடிமுத்தூர்-கோபாலபுரம் சாலையில் பிரிந்து கேரளா எல்லை முதல் தப்பட்டைக்கிழவன்புதூர் செல்லும் சாலையில், எல்லைப்பள்ளத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், காரமடை-பெரியபட்டி-நெகமம் சாலை (வழி) ஆமந்தக்கடவு சாலையில், வீதம்பட்டியில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 81 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்கள் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே.செல்வன், தலைமைப்பொறியாளர் (பெருநகரம்) ச.சுமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.