ராமநாதபுரம்

மாவட்ட கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் முதல்வருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

ராமநாதபுரம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்த பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சதன் பிரபாகர், சோழவந்தான் கே.மாணிக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் மாவட்ட கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி என்.சதன் பிரபாகரன் ஆகியோரும் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால் குடம் எடுத்தும் மேள தாளங்களுடன் வழி நெடுகிலும் முதல்வரை வரவேற்று பசும்பொன் கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.