தற்போதைய செய்திகள்

முதலமைச்சருக்கு, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் தொண்டர்கள் திரண்டனர்

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரை வருகை தந்த முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆவின் நிலையம், கே.கே.நகர் புரட்சித்தலைவர் சிலை, கோர்ட், பாண்டியன் ஓட்டல், தல்லாகுளம், தேவர் சிலை ஆகிய இடங்களில் தாரை தப்பட்டை முழங்க கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பெண்கள் பூரண கும்பம் வைத்தும், குடை வைத்தும், சுவாமி வேடமிட்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, கழக மாணவர் அணி இணை செயலாளர் குமார், கழக இளைஞர் அணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், கழக இலக்கிய அணி இணை செயலாளர் ரமேஷ், முன்னாள் துணை மேயர் திரவியம், பகுதி கழக செயலாளர்கள் அண்ணா நகர் முருகன், தளபதி மாரியப்பன், ஜெயவேல், மகேந்திரன், செந்தில்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் சோலைராஜா, அரவிந்தன், மாணிக்கம், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.