தற்போதைய செய்திகள்

முதலமைச்சருக்கு செங்கோல் பரிசு: வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சருக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செங்கோல் பரிசாக வழங்கினார்.

பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை, விரகனூர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் ஒயிலாட்டம், கரகாட்டம், மேளதாளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வெற்றியின் அடையாளமாக முதலமைச்சருக்கு செங்கோலை பரிசாக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். இதே மதுரையில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்ட போது அதை அவர் அம்மாவிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.