தற்போதைய செய்திகள்

கழக அம்மா பேரவை சார்பில் மதுரையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

மதுரை

மதுரைக்கு வந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவில் கலந்து கொள்ள ராமநாதபுரம் செல்வதற்காக மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், அழகர் கோயில், மேலமாசி வீதி, தண்டாயுதபாணி கோயில் ஆகிய கோயில்களில் இருந்து முதலமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சாலையின் இருபுறமும் பெண்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். மண்டேலா நகர் பகுதியில் அம்மா கிச்சன் சார்பில் முதலமைச்சருக்கு இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களை பார்த்து முதலமைச்சர் இரட்டை விரலை காண்பித்தார். அப்போது அவர்கள் இளைஞர்களின் பாதுகாவலர் முதலமைச்சர் வாழ்க, வாழ்க என்று விண்ணை முட்டும் அளவுக்கு கோஷமிட்டனர்.

மேலும் வழியெங்கும் முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் அடங்கிய 8 அடி உயரம் கொண்ட புகைப்பட டிஜிட்டல் போர்டுகளை கையிலேந்தி முதலமைச்சரை வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் புன்னகை செய்து கும்பிட்டபடி சென்றபோது அங்கிருந்த மக்கள் விவசாயிகளின் தோழன் என்று முழக்கமிட்டனர். பசும்பொன் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் மதுரை வந்த முதலமைச்சருக்கு கருப்புசாமி கோயில் அருகே தாரை தப்பட்டை முழங்கவும், பெண்கள் குலவையிட்டும் வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், பிச்சை ராஜா, செல்லம்பட்டி ராஜா, நகர செயலாளர் பூமாராஜா, பேரூர் கழக செயலாளர் கொரியர் கணேசன், நெடுமாறன், பாலசுப்பிரமணி, வாசிமலை, அழகுராஜா, குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், பால்பாண்டி, பி.லட்சுமி மகேந்திர பாண்டியன், வக்கீல் தமிழ்ச்செல்வன், சிங்கராஜ பாண்டியன், ஆர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.