சேலம்

மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் கழகம் – மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் பெருமிதம்

சேலம்

மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் கழகம். கழக ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லாத வீடுகளே கிடையாது என்று மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் பெருமிதத்துடன் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக ஆவின் பொது மேலாளர் நர்மதாதேவி வரவேற்று பேசினார். ஆவின் தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் பேசியதாவது:-

சேலம் மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டை. எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு துரும்பைக்கூட அசைத்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ரத்தத்திலும் கழக உடன்பிறப்புகளின் உழைப்பாலும் உருவாகியது கழகம் என்ற மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்தின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார். அரசின் நலத்திட்டங்கள் செல்லாத இல்லங்களே இல்லை என்ற நிலை உருவாகும் அளவிற்கு அனைத்து பணிகளையும் சிறப்பாக செம்மையாக செய்துள்ளார். மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் கழகம். கழக அரசு சொன்னதை செய்யும். சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றும்.

சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கழக நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் கண் தூங்காமல் தேனீக்கள் போல செயல்பட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்தை அமோக வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னத்தம்பி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சேகர், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமா