கன்னியாகுமரி

நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் 2 ஆயிரம் பேருக்கு முக கவசங்கள் – அ.தமிழ்மகன் உசேன் வழங்கினார்

கன்னியாகுமரி

கொரோனா தடுப்பு பணிகளில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்து வரும் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் நோய் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 3-வது கட்டமாக நாகர்கோவில் வடசேரி சந்திப்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் அமைந்துள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் ஆகியோருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் 2 ஆயிரம் பேருக்கு முக கவசங்களை அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் எஸ்.எம்.பிள்ளை, கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் த.ஷாநவாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் முகம்மது ராபி, அல் அமீன் நகர் முகம்மது பஷீர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கேசவ பெருமாள், நகர தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வினோத், சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் அப்துல் ரஷீது, நாகராஜன் மற்றும் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.