தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்

திருப்பூர்

திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துங்காவி ஊராட்சி பகுதியைச் சார்ந்த 100 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் ஏற்பாட்டில் வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் குணம் தர்மத்தை கொடுக்கும். இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் வைத்தவர் முதலமைச்சர். அவரது செயல்பாட்டை பாராட்டும் வண்ணம் மத்திய அரசே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்ததில் தமிழகம் முதன்மை மாநிலம் என பாராட்டைப் பெற்றது.

பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகச்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுவாக நோய் தாக்குதல் உள்ள இக்கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்த்து பாதுகாப்பாக ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.
இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி, துணைத்தலைவர் பொன்னுத்தாய், நகர கழக செயலாளர் டி.டி.காமராஜ், கழக பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.தண்டபாணி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.சிவக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வஞ்சியப்பன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சிவலிங்கம், பஜாஜ் தம்பிதுரை, ஜி.ஆர்.பாலு, தாயாண்டசாமி, சிதம்பரநாதன், தொப்பம்பட்டி பாலு, சரவணன், ராஜா, ராஜகோபால், அபி, ராயப்பன், கருப்புசாமி, வீரபத்திரன், கணேசமூர்த்தி, பாலாமணி, வஞ்சிரம், வினோத் குமார், நடராஜ், காதர், நாகராஜ், கமல், வார்டு உறுப்பினர்கள் சித்ரா, ஈஸ்வரி, பரமேஸ்வரி, பாலு, மணி, ஹரி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.