தற்போதைய செய்திகள்

கோதவாடி குளம் தூர்வாரும் பணி – பொள்ளாச்சி வ.ஜெயராமன் தொடங்கி வைத்தார்

கோவை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவில் 312 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளத்தை தூர்வாரும் பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் கோதவாடி குளத்தில் 2 தடுப்பணைகளும், ஆச்சிப்பட்டி குள்ளக்காபாளையம் பகுதியில் 2 தடுப்பணைகள், சூலக்கல் பகுதியில் 9 உட்பட கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் 94 தடுப்பணைகள், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய பகுதியில் 110 தடுப்பணைகள் கட்டி வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குளத்தில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகள் விவசாய தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றும் போது உபரிநீர் மூலம் கோதவாடி குளத்துக்கு விடப்பட்டு நிரப்பப்படும்.மேலும் குளத்தின் நீர் வழித்தடம் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு செய்து குளம் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என்.ஆர்.ராதாமணி, ஒன்றிய செயலாளர் பாபு என்கிற திருஞானசம்பந்தம், ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணைத்தலைவர் எம்.எம்.ஆர்.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்