தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் மாற்றுகட்சியினர் 1000 பேர் கழகத்தில் இணைந்தனர்

சிவகங்கை

சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் மாற்றுக்கட்சியினர் சுமார் 1000 பேர் அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஏற்பாட்டில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி

அரசர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், குணசேகரன், ஜெயபிரகாஷ், ஸ்ரீதரன், பாரதி, கோபி, ஜெகதீஸ்வரன், நகர செயலாளர் விஜி போஸ், மாவட்ட ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.